சட்ட விரோத குடியேற்றக் காரர்களை வேட்டையாடும் மலேசியா!

எம்.எம்.நிலாம்டீன்-
லேசியா இந்தியாவுக்கு சாட்டையடி! இந்தியாவின் CAA மற்றும் NRC சட்டத்தை மலேசியா பிரதமர் உடனடியாக கண்டித்திருந்தார்.இப்போது மலேசியாவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவில் இருந்து முற்றிலுமாக களைவதற்க்கு ஒரு முழுமையான திட்டத்தை மலேசிய உள்துறை அமைச்சு தயாரித்துள்ளது:

மலேசியாவில் 1.26 மில்லியன் சீனர்களும், 296,000 ஆயிரம் இந்தியர்களும் உள்ளார்களாம்.

உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின்

நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை முழுமையாக களைவதற்க்கு முழுமையான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.என்று மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

முஹைதீன் யாசின் கூறுகையில், உள்துறை அமைச்சகத்தின் (முழுமையான) திட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகள் இடையே வலுவான சட்ட அமலாக்கம் மற்றும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளின் வழி சட்டவிரோத குடியேறிகளை களைய முடிவெடுக்கப் பட்டுள்ளது என்கிறார்.
சட்டவிரோத குடியேறிகளை அகற்றுவது அமலாக்க மற்றும் சட்ட நடவடிக்கைகளுடன் கையாளப்பட வேண்டும். மேலும்,சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து மலேசியாவிற்க்கு ஒரு தேசிய பிரச்சினையாக இருக்கக்கூடாது, இது நாட்டின் சமூக மற்றும் சட்ட அம்சங்களில் தொடர்ந்து எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டு சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் வெற்றியைப் பெற்றுள்ளோம், 2020 யில் ஆரம்பிக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுளில் சட்டவிரோத குடியேறிகளே இல்லாத மலேசியாவை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது,

இந்தத் திட்டத்தின் மூலம், எந்தவொரு வெளிநாட்டுத் தொழிலாளர்களும் தகுந்த வேலை உரிமம் இல்லாமல் நுழையவோ அல்லது சட்டவிரோதமாக வேலை செய்யவோ முடியாது என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் கூறினார்.

சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை அனுமதி இல்லை என்றாலும் பயமில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது மலேசியாவின் சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை என்பதயே காட்டுகிறது என்ற அவர் இனிமேல் சட்டவிரோத குடியேறிகளுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் குடுக்கும் முதலாளிமார்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.

ஆகஸ்ட் 1 முதல் அரசாங்கத்தின் (பி 4 ஜி) குடிவரவு அகதிகள் திட்டத்தை அமல்படுத்துவது நாட்டில் சட்டவிரோத குடியேறிகளை இடம்பெயர்வு செய்யும் முதல் முயற்சியாகும் என்றும் முஹைதீன் கூறினார்.

அரசாங்கம் கொண்டு வரும் இத்திட்டம் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள், சட்டவிரோத குடியேறிகளை பூஜ்ஜிய நிலைக்குள் அடைவதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
(உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின்)

விரைவில் 70,000 சட்டவிரோத குடியேறிகள் வேட்டையாடப்படுவார்கள்: மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி தாவுட் அறிவிப்பு.

பட்டியலில் உள்ள இவர்களை உடனடியாக கைது செய்ய மலேசிய குடிநுழைவுத்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவுவிட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி தாவுட் கூறினார்.

சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களை சிறையில் அடைக்கும் முயற்சிகளை குடிநுழைவுத்துறை தீவிரப்படுத்தும் எனவும் மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி தாவுட் அறிவித்தார்,
(மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ கைருல் சைமி தாவுட்)

சீனா மற்றும் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என மலேசிய முக்கிய எதிர்கட்சியான ஒரே இஸ்லாமிய கட்சி (PASS) அறைகூவல்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர்,துவான் இப்ராஹிம் துவான் மான் கூறுகையில், வருடம் 2016 மற்றும் 2018 க்கு இடையில் மலேசியாவிற்க்கு சுற்றுப்பயணிகளாக வந்த சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாயகம் திரும்ப வில்லை என்றார்.

"மலேசிய குடிவரவு துறை (My IMM) வெளிப்படுத்திய அறிக்கையில், சுமார் 1.26 மில்லியன் சீனர்களும், 296,000 இந்தியர்களும் தாயகம் திரும்ப வில்லை என கூறப்பட்டுள்ளது, இந்த தகவல்களை மலேசிய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையும் உறுதிப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசிய இஸ்லாமிய கட்சி (PASS) பாஸ் கட்சியின் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மான்

தேசிய பாதுகாப்பு குறித்த விடயங்களை அரசாங்கம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற துவான் இப்ராஹிம் அதிகமான சீனநாட்டவர், மைகாட் விற்பனை மற்றும் மோசடி சிண்டிகேட், 'ஆன்லைன் மோசடியிலும்' ஈடுபடுகின்றனர் என்றார்.
சமீபத்தில் மலேசியாவில் 'ஆன்லைன் மோசடியில்' ஈடுபட்ட ஆயிரம் சீனர்களை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பாதுகாப்பு விசயங்களில் அரசாங்கம் எந்த சமசரங்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநரே இன்று காலை நேரிடையாக களத்தில் இறங்கிய காட்சிகள்.

மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ 'இந்திரா கைருல் டிசைமியின் தலைமையில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று செர்டாங் மற்றும் புச்சோங்கில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த எட்டு பெண்கள் உட்பட 87 வெளிநாட்டவர்களை கைது செய்தனர். நாளையும் சோதனை தொடரும் என அறிவிதுள்ளார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -