எம்.எம்.நிலாமுடீன்-
மிக பெரும் அழிவை இஸ்லாமிய நாடுகள் சந்திக்கும்!
ஈராக்கில் தளபதி காசிம் சுலைமானி முன்னெடுத்த சிறப்பான பணிகளை புதிய தளபதி தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாக ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய தளபதி
ஈரானின் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு பிரிகேடியர் ஜெனரல் இஸ்மயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
குட்ஸ் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இஸ்மயில் கானி இந்தப் படைப் பிரிவின் துணைத் தளபதியாக இருந்து வந்தவராவார்.
கொல்லப்பட்ட தளபதி காசிம் சுலைமானி முன்னெடுத்த சிறப்பான பணிகளை புதிய தளபதி தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாக ஈரான் அரச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கானி 1997 இல் ஈரானின் புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவான குட்ஸ் படையின் துணைத் தளபதியாக நியமனம் பெற்று அப்படைப் பிரிவில் நீண்ட காலம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.