பாறுக் ஷிஹான்-
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராகவும் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார் .
இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத்னால் வெள்ளிக்கிழமை ( 24 ) திருகோணமலை உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன .
கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளரும் ஆன ஹரிபிரதாப்புக்கு சுற்றுலாத் துறையின் தவிசாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.