அல் நஜா விளையாட்டுக் கழகமும், அல் நஜா இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் ANPL - 2020 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் முஹம்மட் இத்ரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சுற்றுத் தொடரை ஆரம்பித்து வைத்து வைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம், ஆப்தீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இந்த சுற்றுத் தொடர் யாவும் அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவு கடற்கரை அல் நஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.