நிகவெரடிய, சுதீரகம கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு.

டமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நிகவெரடிய சுதீரகம விஹாரையின் விகாராதிபதி, மஹமிதாவ பஞ்ஞாரத்ன தேரர் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நிகவெரடிய சுதீரகம கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையும் தற்காலிக தீர்வொன்றை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் முன்வந்து வழங்கியுள்ளார்

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பின்னூட்டம் ஒன்றை இட்ட பஞ்ஞாரத்ன தேரர், ' தமது கிராமத்தில் சுமார் 25 வீடுகள் மற்றும் விஹாரைக்கு குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப் படுவதாகவும், இதற்கு உடனடியாக தீர்வொன்றைப் பெற்றுத்தந்ததால் மிகவும் நல்லது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னூட்டம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட ஆளுநர், 31ஆம் திகதி நிகவெரடிய சுதீரகம விஹாரைக்கு சென்று, அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது அம்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே நீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டு, பிரதேச சபையின் உதவியுடன் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த தற்காலிக தீர்வுக்கு மேலதிகமாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீரை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதாகவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த உடனடி நடவடிக்கை அக்கிராம மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -