மௌலவி ஆசிரியர் நியமன முன்னெடுப்புக்களுக்காக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை கிழக்கு மாகாண மௌலவிமார் பாராட்டும் நிகழ்வு ஒன்று உலமா கட்சியின் அங்கத்துவ மௌலவிமார்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை நிந்தவூரில் நடை பெறும் இந்நிகழ்வில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மௌலவி ஆசிரியர் நியமனம் சம்பந்தமான பூரண விளக்கங்களை வழங்குவார். அத்துடன் இதற்காக முயற்சியெடுக்கும் கல்வி அமைச்சருக்கும் ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் உலமாக்களின் பகிரங்க ஆதரவை வழங்கும் நிகழ்வாகவும் இது இருக்கும்.
இந்நிகழ்வுக்கான முன்னெடுப்புக்களை மௌலவி அர்ஷாத் மற்றும் மௌலவி நளீம் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் மௌலவி மற்றும் மௌலவியாக்கள் 0777570639 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -