எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகம் உட்பட நாடு முழுவதும் போட்டியிடும்.


கொள்கை பரப்பு செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ரோஸ் அமைப்பு என்பது நீண்ட காலமாக இந்த நாட்டில் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்து வந்துள்ளது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுக்கு கால்பதித்துள்ளுத. இந்த 45 ஆண்டு காலப்பகுதியில் வடக்கிழக்கு உட்பட மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்தவற்காக பல்வேறு சமூக அரசியலில் ஈடுபட்டு, பல செயப்படுகளை தியாகத்துடன் செய்துள்ளது.இந்நிலையில் வரும் பொதுத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு பல்வேறு குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முனைவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.அவ்வாறு வருகின்ற எந்த குழுவும் ஈரோஸ் அமைப்புடன் தொடர்பு பட்டது அல்ல.ஆகவே நடைபெவுள்ள பொதுத் தேர்தலில் மலையகம் உட்பட நாடு முழுவதும் போட்டியிடப்போவதாக அவ்வமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை (01) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....
ஈரோஸ் அமைப்புடன் பல நூற்றுக்கணக்கான மலையக தோழர்கள் இணைந்து செயப்பட்டு வந்துள்ளார்கள்.எமது தலைவர் ரத்னசபாபதி அவர்கள் மலையகத்தையும் இணைத்துக்கொண்டு செயப்பட்டதனால் மலையகத்தின் பல தோழர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள்.இதன் பயனாக 1985 ஆண்டு நடைபெற்ற திம்பு பேச்சுவரத்தையின் போது நான்கு அம்ச கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் ஒன்றாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1989 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலையக பிரதிநிதித்துவம் இல்லாது போகக் கூடாது. என்று நினைத்ததன் காரணமாக ஈரோஸ் அமைப்பு மலையகத்தில் போட்டியிடவில்லை. எனினும் வடக்கிழக்கிலே சுயேட்சையாக போட்டியிட்டு 13 ஆசனங்களை பெற்றிருந்தோம். அப்போது மலையக பிரதிநிதித்துவம் ஒன்று தெரிவு செய்யப்படாமையினால் அதில் ஒரு ஆசனத்தினை மலையகத்திற்கு வழங்கியிருந்தோம். அந்த அiடிப்படையில் மலையகத்தில் உள்ள தோழர்கள் குழுக்களாகவோ அணிகளாகவோ ஒரே அணியின் கீழேயே செயப்பட்டு வந்துள்ளார்கள்.
இந்த செயப்பாட்டின் மூலமே ஈரோஸ் அமைப்புக்கு ஒரு களத்தினையும் நற்பெயரினையும் ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த நற்பெயர் தனாக வரவில்லை இளமையை இழந்து, தொழிலினை இழந்து,பொருளாதாரத்தினை இழந்தே, உயிரை பணயம் வைத்தே இந்த நற்பெயர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நற்பெயருக்கு களங்கும் ஏற்படும் வகையில் இந்த மூத்த தோழர்களின் தியாகத்தினை சில சுயநல வாதிகள் ஈரோஸ் அமைப்பு என்ற பெயரில் மலையகத்தில் ஊடுருவி சந்தர்;பத்தினை பயன்படுத்து பல்வேறு பிரச்சிகைகளை தோற்று வித்து தேர்தலில் போட்டியிட ஒரு குழு முயற்சி செய்து வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.ஆகவே அந்த குழுவுக்கு ஈரோஸ் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.அவ்வாறு வருபவர்களை அடையாளப்படுத்தவும், நாம் பின் நிக்கப்போவதில்லை;.இதன் ஒரு செயப்பாடாக ஹட்டன் பகுதியில் இளைஞர் மகாநாடு ஒன்று எதிர்வரும் 04 ம் திகதி நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது இந்த மகா நாட்டிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.மலையகத்தினையும் தேர்தலினையும் இலக்கு வைத்து வருபவர்களை இனங்கண்டு கொள்ள மலையக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.அமைதியாக இருக்கின்ற மலையதக்தில் பிரச்சினைகளை தோற்றுவித்து, அதன் மூலம் இலாபம் தேட நினைப்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். நாங்கள் கடந்த காலங்களை எவ்வாறு பொது அமைப்புக்களுடனும் முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து செயப்பட்மோ அதே போன்று தொடர்ந்தும் இம்மக்களின் உரிமைக்காக செயப்படுவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலுக்கு அவ்வமைப்பின் இணைப்பாளர் தமிழ்மாறன் நவநிதி,எஸ்.நல்லுசாமி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -