தெ.கி. பல்கலைக்கழக கலை, கலாசார பீட 25 ஆம் ஆண்டு நிறைவு விழா !!

நூருல் ஹுதா உமர்-

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முன்றலில் மாணவ பேரவையின் ஏற்பாட்டில் இன்று (30) மாலை நடைபெற்றது.

மாணவ பேரவை தலைவர் டி.எம்.ஹிசாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலை, கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபுபக்கர், தொழினுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், முன்னாள் கலை, கலாசார பீட பீடாதிபதி பௌசுள் அமீர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அரசியல் துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸீல், தென்கிழக்கு பல்கலைகழக வரலாற்றையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தேவைகள் பற்றியும் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், கலை, கலாச்சார பீட பிரிவு தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -