திகாமடுல்லையும், திகிலான முஸ்லிம் பிரதிநிதித்துவமும்.-@ D N A


எதிர்வரும் பொதுத் தேர்தலில், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி இப்போதே பலரின் எண்ணங்களிலும் அலைபாய்கிறது.
அதிலும், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு இங்கு நடக்கப்போகும் தேர்தலைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. யார் யாரோடு இணைந்து கேட்கப்போகிறார்கள், எந்தக் கட்சியில் யார் களமிறங்கப்போகிறார்கள், எந்தக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பலரும் ஏதேதோ அலசுகிறார்கள். நாமும் நமது பங்கிற்கு ஏதாவது அலசுவோம்!

01) SLPP அணி கூட்டாகவும், ஏனைய கட்சிகள் தனியாகவும் களமிறங்கினால், போனஸ் ஆசனம் உட்பட நான்கு ஆசனங்கள் அதற்கு கிடைக்கலாம். (மொத்தமாக ஏழு ஆசனங்கள் என்று வைப்போம்). ஏனைய கட்சிகளான, UNPக்கு ஒரு ஆசனமும், SLMCக்கு ஒரு ஆசனமும், அநேகமாக 7வது ஆசனம் TNAக்கும் கிடைக்கலாம். SLPP அணிக்கு கிடைக்கும் நான்கு ஆசனங்களில், அநேகமாக மூன்று சிங்களவர்களுக்கும், ஒன்று முஸ்லிம்களுக்கும் கிடைக்கலாம். இதன்படி, சிங்களவர்களுக்கு நான்கு ஆசனங்களும், முஸ்லிம்களுக்கு இரண்டு ஆசனங்களும், தமிழர்களுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கலாம்.

02) SLPP அணியும் கூட்டாக களமிறங்கி, UNPயோடு கூட்டாக SLMCயும் ACMCயும் களமிறங்கினால், SLPP கூட்டு வென்றால் அதற்கு நான்கு ஆசனங்களும், UNP கூட்டுக்கு மூன்று ஆசனங்களும் கிடைக்கலாம். இதன்படி, SLPP கூட்டில் மூன்று சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும், அதேபோல UNP கூட்டில் ஒரு சிங்களவரும் இரண்டு முஸ்லிமும் அல்லது மூன்று முஸ்லிம்களும் தெரிவாக வாய்ப்புண்டு. மொத்தத்தில் நான்கு சிங்களவர்களும், மூன்று முஸ்லிம்களும் தெரிவாகலாம்.

அல்லது, SLPP கூட்டுக்கு நான்கு ஆசனங்களும் (மூன்று சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும்), UNP கூட்டுக்கு இரண்டு ஆசனங்களும் (இரண்டு முஸ்லிம்கள் அல்லது ஒரு முஸ்லிமும் ஒரு சிங்களவரும்), TNAக்கு ஒரு ஆசனமும் (ஒரு தமிழர்) கிடைக்கலாம்.

03) SLPP அணியும் கூட்டாக களமிறங்கி, UNPயோடு கூட்டாக SLMCயும் ACMCயும் களமிறங்கி UNP வென்றால், UNPக்கு நான்கு ஆசனங்களும் ( மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும்), SLPPவிற்கு மூன்று ஆசனங்கள் (மூன்று சிங்களவர்கள் அல்லது இரண்டு சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும்) அல்லது SLPPவிற்கு இரண்டும் ( இரண்டு சிங்களவர்கள் ), TNAயிற்கு ஒன்றும் கிடைக்கலாம்.

04) SLMCயும் ACMCயும் ஒன்றாக இணைந்து களமிறங்கி முஸ்லிம்களும் நிலமையை உணர்ந்து ஒன்றுபட்டு வாக்களித்தால், இவர்களுக்கு நான்கு ஆசனங்களும் (நான்கு முஸ்லிம்கள்), SLPPவிற்கு இரண்டு ஆசனங்களும் (இரண்டு சிங்களவர்கள்), UNPக்கு ஒன்றும் (ஒரு சிங்களவர்) கிடைக்கலாம்.

அல்லது, SLMC + ACMC கூட்டிற்கு மூன்றும் (மூன்று முஸ்லிம்கள்), SLPPவிற்கு இரண்டும் (இரண்டு சிங்களவர்கள்), UNPக்கு ஒன்றும் (ஒரு சிங்களவர்), TNAயிற்கு ஒன்றும் (ஒரு தமிழர்) கிடைக்கலாம்.

05) SLPP அணி வெல்கின்ற போது, அதில் ஒரு சிங்களவரும் மூன்று முஸ்லிம்களும் தெரிவாகுவதற்கு வாய்ப்புகள் அநேகமாக குறைவு.

06) ஆக மொத்தத்தில், திகாமடுல்லையில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் தக்க வைக்கப்பட வேண்டுமானால், முஸ்லிம் காட்சிகள் ஏதாவது ஒரு பெரும்பான்மைக் கட்சியோடு சேர்ந்தே களமிறங்க வேண்டும். அவ்வணிக்கு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தான் இம்முறையும் குறைந்தது மூன்று பிரதிநிதிகளை பெறலாம்.

07) தற்போதுள்ள சூழ்நிலையில், முஸ்லிம் கட்சிகள் SLPPயோடு சேர்ந்து கேட்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனினும், அரசியலில் எதுவும் நடக்கலாம். வரும் வாரங்களில் இந்த நிலமையும் மாறலாம்.

08) நிலமை மாறி, முஸ்லிம்கள் இத்தேர்தலில் SLPPவை பெருவாரியாக ஆதரித்து, அதில் இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வியும் தொக்கிநிற்கிறது.

09) எனவே, யார் யாரோடு இணைந்து தேர்தலில் களமிறங்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும், முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்துமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்லையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது தெரிய வரும்.

10) ஆக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்???
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -