ஏறாவூர் டி.எஸ் அல் அமீனின் துணிச்சல்மிக்க செயற்பாடு படித்த இளைஞர்களின் எழுசிக்கு அடித்தளமிட்டுள்ளது. (வைரலாகும் படங்கள்)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

கொழும்பிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் மக்களை பார்வையிட போவதாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு  பறந்து வந்து தரையிறங்கிய தலைமை மாவட்டத்தில் எதிரே வரும்பாராளுமன்ற தேர்தலில் அடுத்த கட்ட நகர்வு பற்றி பாசிக்குடா உல்லாச கோட்டலில் கால்மேல் கால் போட்டு செயற்பாட்டாளர்களுடன் அலசி கொண்டிருக்க, மறுபக்கத்திலே கோட் சூட்டுடன் குளிரூட்டிய அறைக்குள் நிருவாகம் பார்க்க வேண்டிய ஏறாவூர் பிரதேச செயலாளர் அல்.அமீன் மக்களை காப்பாற்றும் மகத்தான பணியில் தன்னை அர்பணித்து களத்தில் இறங்கி செயற்பட்டுள்ளை பிரதேசத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் அலசப்படும் அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அல் அமீனுடைய குறித்த செயற்பாடு சம்பந்தமான படங்கள் வைரலாகி வருகின்றது. இன்னொரு பக்கத்திலே மக்களுடைய வாக்குகளினால் சுகபோக வாழ்க்கையினை அனுபவிக்கும் இவ்வாறான ஏமாற்று அரசியல் வித்தைகளை அரங்கேற்றும் தலமைகளுக்கும் அவர்களுடைய செயற்பாட்டாளர்களுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் படித்த இளைஞர்களின் எழுச்சிக்கு பிரதேச செயலாளர் அல் அமீனுடைய குறித்த செயற்பாடனது மிகப்பெரும் உதாரணமாக பதிப்யப்பட்டுள்ளது என்பதும் சமூகத்துக்கு ஒரு மிகப்பெரும் செய்தியாகவே உள்ளது.

இவ்வாறான அல் அமீனின் செயற்பாட்டுக்கான முக்கிய காரணத்தினை பார்க்கின்ற பொழுது....தான் வளர்ந்த ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில்,

தோணாக்களில் மீன்பிடித்து விளையாடிய காலத்தை நினைத்துப்பார்க்கிறார் அல் அமீன்.

கடந்த 25 வருடகாலமாக காணாமல் போன தோணாக்களை, கண்டுபிடித்து, வருடாவருடம் வெள்ள நீரால் பாதிப்படையும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு விடிவு கிடைக்காதா? என்று ஏங்கிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார்.

பலம் பொருந்திய அரசியல் பலமிருந்தும் கூட, நிறைவேற்ற முடியாத வேலையை தான் பதவியேற்று ஓரிரு வாரங்களிலேயே பொதுமக்கள் நலன் கருதி செய்து காட்டிய பிரதேச செயலாளராக அல்அமீன் வரலாற்றில் பதியப்படுகின்றார்.

காலங்காலமாக ஏறாவூரின் தோணாக்களாக பயன்படுத்தி வந்த இடங்களை, கையகப்படுத்தும் பண முதலைகளுக்கு சரியான பாடத்தை புகட்டி படித்த இளைஞர்களுக்கு இவ்வாறுதான் அரசியலுக்கு அடிபணியாமல் நிருவாகம் செய்வது என்பதனை காட்டிய ஹீரோவாக மாறியுள்ளார் அல்அமீன்.

குறித்ததோணாக்களை நவீன மயப்படுத்தி விரைவாக வெள்ள நீர் வழிந்தோட செய்ய அதற்கான நிதியீட்டங்களைப் பெற்று அபிவிருத்தி செய்ய பிரதேச செயலாளர் என்ற வகையில் அரசியல் தலைமைகள் உதவ முன்வரவேண்டும் என்ற பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தில் அரிசிஆலை உரிமையாளர்களினால் சட்டவிரோதமாக மூடப்பட்டிருந்த நீரோடை தோணாக்கள் வாய்த்தர்க்கத்திற்கு மத்தியில் அல் அமீனின் துணிச்சல்மிக்க செயற்பாட்டினால் தோண்டுப்பட்டன.

ஏறாவூர் பிரதேச செயலாளர் அல்- அமீன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்திற்கு பொதுமக்கள், பொலிஸார் , ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல் மற்றும் சாஜித், ஜௌபர், கமால்தீன் ஆகிய உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.

கடந்த சுமார் 25 வருடகாலமாக இத்தோணாக்கள் அரிசிஆலை உரிமையாளர்களினால் அடைக்கப்பட்டுள்ளதனால் ஐயங்கேணி, மிச்நகர் மற்றம் மீராகேணி போன்ற பிரதேசங்கள் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தில் மூழ்குவதுண்டு.

அத்துடன் அரிசிஆலை கழிவுகள் இத்தோணாக்களில் கொட்டப்படுவதனாலும் அரிசி ஆலையிலிருந்து வெளியாகும் தூசு துணிக்கைகள் காற்றுடன் கலந்து வீடுகளில் படிவதனாலும் பொதுமக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்தனர்.

இது தொடர்பில் கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டபோதிலும் எவ்வித ஆக்கபூர்வமா நடவடிக்கைளும் எடுக்கப்படாதிருந்தமை பொதுமக்களின் மிகப்பெரும் கவலையாக இருந்தது.

இந்நிலையில் புதிதாக நியமனம்பெற்றுள்ள ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் அல் - அமீன் மேற்கொண்ட துணிகரமானதும், துரிதமானதுமான நடவடிக்கையினையடுத்து வெள்ளம் இலகுவாக வடிந்துசெல்வதையிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குறித்த அல்-அமீனின் செயற்பாடானது ஏற்கனவே நான் கூறியதை போன்று அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவரும் அரசியல் தலைமைகளுக்கும் அவர்களுடைய செயற்பாட்டாளர்களுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் படித்த இளைஞர்களின் எழுச்சிக்கு மிகப்பெரும் உதாரணமாக பதிப்யப்பட்டுள்ளது என்பது ஏறாவூரில் புதிதாக எழுதப்பட்டுள்ள வரலாறாக உள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -