கிழக்கு முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்
காலத்துக்கு காலம் அவ்வப்போது இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு நாச வேலைகள் என்பனவற்றுக்காக நிவாரணம் வழங்குவது மாத்திரமே அரசின் பணியாக இருக்கக்கூடாது. இவை எற்படும் முன் அதனைக் காப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்; சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.சமீபத்திய சீரற்ற வானிலை, அடை மழை பெருவெள்ளம் தொடர்பாக மக்கள் நிர்க் கதிக்குள்ளாகியிருப்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட பின்னர் அரசு நிவாரணம் வழங்கும் கலாசாரத்தையும், மக்கள் நிவாரணங்களைப் பெற முண்டியடிக்கும் கலாசாரத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.
அழிவுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அவதானமாக இருந்து அந்த அழிவுகளை முன்னாயத்தமாக முறியடிக்கும் யுக்தித் திட்டமிடல் அனைத்துத் தரப்பிலும் இருக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, தற்காப்பு என்பன போன்ற விடயங்களில் இன்னமும் மக்கள் தயார்படுத்தப்படாத நிலையில் இருந்து கொண்டி ருக்கின்றார்கள்.அதேபோன்று அரசிடமும் இத்தகைய யுக்தித் திட்டமிடல்கள் இல்லை.
இலங்கை காலாகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்களுக்கும், அவ்வப்போது மனிதனால் உண்டாக்கப்படும் மனித நாச அழிவு வேலைகளையும் தடுக்கக் கூடிய யுக்தித் திட்டமிடல் பொறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டு;ம்.
மனித நாச அழிவுகளுக்கான இழப்பீடுகளாக அரசு நிவாரணத்தை வழங்கினாலும் அது நாட்டு மக்களின் பணம் என்பதை நினைவிற் கொண்டு அழிவு நாச வேலை கள் இடம்பெறாமல் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதே அரச பணியாக இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
எனவே, இயற்கை செயற்கை அழிவுகள் நடந்த பின்னர் இழப்பீடுகள், நிவாரண ங்கள் வழங்கும் கலாசாரத்தை மாற்றியமைத்து அழிவுகள் இடம்பெறாமல் முன்னாயத்தமாகக் காப்பதற்கு அரசும் துறைசார்ந்த தரப்பினரும் ஏற்ற ஒழுங்கiளைச் செய்ய வேண்டும்.
அறிவுப் புலத்தில் நாம் பின்தங்கியிருக்கின்றோம் என்பதற்கு நாம் முன்னேற்பாடில் லாமல் எதிர்கொள்ளும் அழிவுகளே ஆதாரமாக அமைந்திருக்கின்றன- என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.