அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி பிரதேசத்தில் இலவச மின்சார இணைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் சாளம்பைக்கேணி-04 பல்தேவைக் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுவின் செயலாளர் எம்.எச்.கபீர், பொருளாளர் ஏ.எம்.ஐ.ஹஸன், மத்தியகுழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலவச மின்சார இணைப்பு 62 குடும்பங்களுக்கும், 3பாலர் பாடசாலைக்கு தளபாடங்களும், 4விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், 2சமூக தொண்டு அமைப்புகளுக்கு தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.