லீடர் அஷ்ரப் வித்தியாலய கலை விழாவும் பரிசளிப்பும்.

எம்.ஐ.சர்ஜூன்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தின் 10வது வருட நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பும் 2019.12.20 - வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதீகளாக ஏற்றுமதி கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அத்துடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் உட்பட விஷேட அதீதிகளாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான்,
மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய பிராந்திய வியாபார ஊக்குவிப்பு உத்தியோகத்தர் ரீ.எம்.மஜீட், சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூம் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜிப்ரி ஆகியோர் கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடந்தேறியதுடன் பாடசாலை, கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டங்களில் கல்வி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசளிப்புகளும் இடம்பெற்றன. அத்துடன் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர சிறப்பான வழிகாட்டுதல்களைச் செய்த அதிபர், ஆசிரியர்களும், பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -