ஐ.எல்.எம் நாஸிம்-
இந் நிகழ்வில் இந்தியாவில் இரண்டு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் பெற்று சம்மாந்துறை மண்ணுக்கு பெருமையையும்,புகழையும் பெற்றுக்கொடுத்த வரலாற்று ஆய்வாளர். தேசமான்ய. தேசபந்து. ஜலீல் ஜீ யை பாராட்டும் முகமாக- சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகார சபையினால் அதன் தலைவர். பிரதேச செயலாளர் அல்-ஹாஜ். எஸ். எல்.முஹம்மது ஹனீபா , அதிகார சபையின் ஆலோசகர், அதிபர். திருவாளர். எஸ். கோணேஷ மூர்த்தி , கலாசார உத்தியோகத்தர் மௌலவி. ரஸ்மி மூஸா மற்றும் அதிகார சபையின் ஏனைய அதிகாரிகள் புடைசூழ பொன்னாடை போர்த்தி பாராட்டி, கௌரவித்ததோடு. பாராட்டப்பட ஆளுமையைப் பற்றி பாராட்டுரையை சிரேஷ்ட ஆசிரியையும்,கலாபூஷணம். பரீதா இஸ்மாயீல் , அதிபர்.எஸ்.கோணேஷமூர்த்தி ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
இன் நிகழ்வில் கலாசார அதிகார சபையின் நிர்வாக, சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.