மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆப்பள்ளிவாசலின் நிர்மானிப்பு வேலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!

அஹமட் சாஜித் -
மாவடிப்பள்ளி மக்களின் முக்கிய தேவையானா புதிய ஜும்ஆப்பள்ளிவாசல் ஒன்று பிரதானவீதியில் நிர்மானிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்படாத நிலையில் 5 வேளைத் தொழுகைகள், ஜும்ஆப் பிரசங்கம் போன்ற மார்க்கக் கடமைகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்தவிடயமே.
கட்டிட ஆரம்ப வேலைகள் எம்மூர் மக்களின் பூரண பங்களிப்புடன் பொருள், பண, சதுர உதவிகள் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய நிலைமை வரை அயல் ஊர்களான சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் மக்களின் வசூல் உதவியுடனும், உள்நாட்டிலுள்ள தனவந்தர்கள், வெளிநாட்டிலுள்ள தனவந்தர்கள், நல்லுள்ளம் படைத்த உதவியாளர்கள், அரசியல்வாதிகளின் உதவியுடனும் நிறைவேற்றப்பட்டு 5 வேளைத் தொழுகைகள், மார்க்கக் கடமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ். முதற் கண் அல்லாஹ்வின் மாளிகையை அமைக்க உதவிய அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு கைறா.

தற்போது பள்ளிவாசலின் கீழ்த்தளத்தினை பூரணமாக்கி முடிப்பதற்கு பல கட்டிட வேலைகள் குறையாக உள்ளன. இருந்த போதிலும் பள்ளிவாசலைச் சூழ பாதுகாப்பு ஜன்னல் கண்ணாடிபிட்டிங் வேளைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவை கட்டாயமாக உள்ளது. காரணம் மழைகாலங்களில் மழை நீர் உள்வருவதனால் பள்ளிவாசலின் கீழ் விரிக்கப்பட்ட காபட்கள் நனைந்து பாதிப்படைவதனால் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கு பாதிப்பாய் அமைந்துள்ளது. குறிப்பிட்ட கண்ணாடி வேலைகளுக்கு பெறுமதியான நிதி தேவைப்பாடுள்ளமையினால் இதனைக் கணிப்பிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், கட்டிட நிர்மானிப்பு குழுவினர் பள்ளிவாசல் கட்டிட நிதியில் போதிய நிதி இல்லாமையினால் தனவந்தர்களின் உதவியினை நாடினர்.
இதனை அறித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் எமது கட்சியின் தலைமையும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியதீன் அவர்களை சந்தித்து இவ்வுதவியைக் கோருவோம் என்று தீர்மானித்து பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு கொழும்பிலுள்ள அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதனை செவிமடுத்து எமது மக்களின் முக்கிய தேவையினை உணர்ந்த எமது தலைமை பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடத்தில் பள்ளிவாசலைச்சூழவுள்ள கண்ணாடி பிட்டிங் வேலைகளை நிறைவு செய்ய 5 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்குவதாக வாக்களித்தார் அல்ஹம்துலில்லாஹ்.
தான் அளித்த வாக்குறுதிக்கு மாற்றம் செய்யாமல் மாவடிப்பள்ளி மக்களின் முக்கிய தேவையான அல்லாஹ்வின் மாளிகை நிர்மானிப்பு வேலைகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற நல்ல நோக்குடன் எமது தலைமை உடனடியாக 5 மில்லியன் ரூபா நிதியினை ஓதுக்கியிருந்தார். அதற்கமையை முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபா நிதிக்கான வேலைகள் தற்போது அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ். இது மாத்திரமின்றி எமது தலைமையான ரிஷாட் பதியுதீன் அவர்கள் எமது பள்ளிவாசலில் மேல்தள சிலப் கொங்கிறீட் இடும் பணிக்காக 10 இலட்சம் ரூபா நிதியினை தனது சொந்தநிதியிலும், கீழ்தள பேஸ் கொங்கிறீட் இடும் பணிக்காக 20 இலட்சம் ரூபா நிதியினையும் ஒதுக்கி எமது மக்களின் முக்கிய தேவையான அல்லாஹ்வின் மாளிகை அமைக்கும் பணிக்கு மாபெரும் உதவிகளை அள்ளி வழங்கியுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

எம் மக்களின் முக்கிய தேவைகளுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் வாக்குப் பிச்சைக்காக அலைந்து திரியும் முஸ்லிம் பெயர்தாங்கிய கட்சியொன்று கடந்த மாகாண சபைத் தேர்தலில் பிரச்சார நிகழ்வுக்காக எம்மூர் வந்து பள்ளிவாசலின் நிர்மானிப்பை பார்வையிட்டு அதன் தஸ்தாவேதுக்களையும் பெற்ற பின் பிரச்சார மேடையில் ஏறிய அக் கட்சியின் தலைமை நான் பிச்சை எடுத்தாவது இப்பள்ளிவாசலைக்கட்டி முடிப்பேன் என போலி வாக்குறுதி அளித்து விட்டு சென்று பல வருடம் கழித்த பின், எம் ஊருக்கு முதன் முதலில் எந்தத் தேவையும் இல்லாமல் வருகை தந்த எமது தலைமையான ரிஷாட் பதியுதீன் தனது சொந்த நிதியில் 10 இலட்சம் ரூபா நிதியினை வழங்கிய பின், மன முடைந்த போராளிகள் அவர்களது தலைவரை சந்தித்து அழுது புலம்பிய பின் 10 இலட்சத்தை வழங்கி ஓடிச் சென்று தலைமறைவாகியவர், இதுவரைக்கும் தான் அளித்த வாக்குறுதியான நான் பிச்சை எடுத்தாவது இப் பள்ளிவாசலைக் கட்டி முடிப்பேன் என்ற வாக்குறுதியை எண்ணிப் பார்க்காமலும், சிந்திக்காமலும் இருப்பதன் மர்மம் என்ன???
இவ்வாறான தலைமைகளுக்க மத்தியில் மக்களின் தேவைகளுக்கு உடனுக்கு உடன் தீர்வு வழங்கி அபிவிருத்திகளை செய்து எமது சமூகத்தின் முதுகெலும்பாய் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை ரிஷாட் பதியுதீன் எவ்வளவு மேல் என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

எமது தலைமையின் அபிவிருத்தி கப்பெரலியத் திட்ட அபிவிருத்தியல்ல..!

எனவே எமது மக்களின் முக்கிய தேவையான அல்லாஹ்வின் மாளிகை அமைப்பதற்கு பல்வேறு உதவிகளை அள்ளி வழங்கிய அ.இ.மக்கள் காங்கிரஸின் தலைமையும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீனுக்கு மாவடிப்பள்ளி மக்கள் சார்பாகவும், நம்பிக்கையாளர் சபை சார்பாகவும், எமது மத்திய குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் "அல்லாஹ்வின் மாளிகை அமைப்பிற்கு உதவிய அன்னாருக்கு இறைவன் வாக்குறுதியளித்த ஸதகதுல் ஜாரியா நன்மையினை அள்ளி வழங்குவானாக"..!
அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக..!
திடீர் ஆபத்துக்களில் இருந்து எமது தலைமையினைப் பாதுகாப்பானாக..!
இனவாதிகளின் இனவாதச் செயல்களில் இருந்து பாதுகாப்பானாக..!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -