தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளன


க.கிஷாந்தன்-

டைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் 07.12.2019 அன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் 04.12.2019 அன்று இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.

பாதிப்பேற்பட்டிருந்த ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

எனினும், சீரற்ற காலநிலை தொடர்வதனால் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும், மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -