கடந்த 28 வருடகாலமாக மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேச பாடசாலைகளில் ஆங்கிலபாட ஆசிரியராக சிறப்பான பணியாற்றி ஓய்வுபெறும் எம்.டபிளியு.எச். ஹிஜாஸ் ஆசிரியரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நீர்கொழும்பு- பெரிமுல்லை பிரதேசத்தைச்சேர்ந்த ஹிஜாஸ் ஆசிரியர் 1992 ஆம் ஆண்டு நியமன காலம் முதல் 2019 ஓய்வுபெறும் காலம் வரை ஏறாவூர்ப்பிரதேசத்திலுள்ள இரண்டு பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார்.
அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் தனது பணியைத் தொடங்கி அறபா வித்தியாலயத்தில் ஆற்றியுள்ள பணியுடன் ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்எம்எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்விமான்கள், மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் என பெரும் எண்ணிக்கையிலாவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஹிஜாஸ் ஆசிரியர் தனது சேவைக்காலத்தில் எந்தவொரு மனிதருடனும் முரண்பாடின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றிதாக பாராட்டுக் கவிதைகள் நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்பட்டன.
அத்துடன் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.
