பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நிலையில் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்பொழுது அரசியல்வாதிகள் கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளை கேட்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் தாங்கள் எவ்வாறான திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது பற்றியும் மக்களுக்கு தெழிவூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் டொக்டர் சியா மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த, ரொட்டவெவ, நொச்சிகுளம் போன்ற பகுதிகளுக்கு இன்று (25)
விஜயம் செய்தனர்.
இவ்விஜயத்தின் போது டொக்டர் சியா மக்கள் மத்தியில் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தான் மொட்டு கட்சியில் போட்டியிட உள்ளதாகவும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு முஸ்லிம் பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு 40 வீதமான காணிகள் இருந்த போதிலும் 9 வீதமான காணிகளுக்கே உரிமப் பத்திரங்கள் காணப்படுவதாகவும் அதில் அதிகளவில் ஒப்பம் இல்லாத அரச காணிகளாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது திருக்கோணமலை மாவட்டத்தில் சிறந்த அரசியல்வாதிகள் யாரும் இல்லாத நிலையில் காரணம் எனவும் எதிர்வரும் காலங்களில் மக்கள் சிந்தித்து ஒரு சிறந்த ஒரு அரசியல்வாதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.