திருகோணமலை கன்னியா பகுதியில் யானை ஒன்று நேற்றிரவு (04) உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கன்னியா பொலிஸ் சோதனைச்சாவடியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் நிலாவெளி செல்லும் வீதியில் யானை உயிரிழந்து கிடப்பதாகவும் தெரியவருகின்றது.
14 வயது மதிக்கத்தக்க இந்த யானை உயிரிழந்த இடத்தில் கம்பிகள் காணப்பட்டதாகவும் மின்சாரம் வைக்கப்பட்டமையினால் மின்சாரம் தாக்கி உயிர் இருந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
யானை உயிரிழந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ஆனாலும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.