கந்தளாய் பிரதேசத்தில் விபத்து



எப்.முபாரக்-
கந்தளாய் பிரதேசத்தில் தனியார் பஸ்சொன்றும்,கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவருக்கும்,பஸ்ஸில் பயணம் செய்த மூவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில்.

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் தனியார் பஸ்சொன்றும்,கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவருக்கும்,பஸ்ஸில் பயணம் செய்த மூவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(1) காலை 6.00 மணியளவில் கந்தளாய் 92 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பௌத்த விகாரைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தனியார் பஸ்சொன்றும், கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகமும், சாரதிகளின் அசமந்தப்போக்கும் நித்திரையுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -