கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நேற்று(30) அன் நஹ்லா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கிண்ணியா மத்திய கல்லூரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் வாஹிட் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
குறித்த சிறுவர் செயற்பாட்டு மையத்துக்கான தளபாட உபகரணங்கள் மற்றும் multi media projector என்பனவும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினரால் நிருவாக குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது
ஆரம்ப பாலர் பாடசாலையின் ஆசிரியைகளும் இதன் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா (நளீமி) கிண்ணியா வலய ஆரம்ப கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் சமீம்,மூதூர் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் அமீர்டீன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்.