காரைதீவு சகா-கடந்த ஒருவார காலத்தில் காரைதீவுப் பிரதேசத்தில் 10பேர் டெங்குநோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்த ஆபத்து நிலைமையைக்கருத்திற்கொண்டு சுகாதார பணிமனை பிரதேச செயலகம் பிரதேசசபை மற்றும் பொதுஅமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளன.
(21) சனிக்கிழமை காரைதீவு 1ஆம் 6ஆம் பிரிவுகளில் பூரணமாக டெங்கு சோதனை நடாத்தப்பட்டது.
இதன்போது டெங்குக்குரிய கொள்கலன்களை பாராமுகமாக வைத்திருந்த நால்வருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
களத்தில் சிரேஸ் பொதுச்சுகாதார பரிசோதகர் எ.எம்.றாசிக் பொதுச்சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு ஆகியோர் பூரணமாக தமது சேவையை ஏனையோருடன்இணைந்து மேற்கொண்டனர்.
ஒலிபெருக்கி அறிவித்தல் விடுக்கப்பட்டு வீடுவீடாக சோதனை செய்யப்பட்டது. பிரதேசசபை கழிவகற்றும் வாகனத்தில் கொள்கலன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆறாம்பிரிவிலுள்ள நீரேரியிலிருந்து வெற்றுக்கொள்கலன்கள் பிரதேசசபையின் ஜே.சி.பி. கனரக இயந்திரத்தினால் அப்புறப்படுத்தப்பட்டன.அவற்றை உழவு இயந்திரங்கள் ஏற்றிச்சென்றன.
