கிழக்கு மாகாணம் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ஏமாற்றியது தான் மக்கள் கண்ட கனவு

 
தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.ஏ.அதாவுல்லா 
எப்.முபாரக்-
கிழக்கு மாகாணம் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ஏமாற்றியது தான் மக்கள் கண்ட கனவு என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.ஏ.அதாவுல்லா தெரிவித்தார்.
கந்தளாயில் பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேற்பாளர் கோத்தாபய ராஜாபக்சவை ஆதரித்து நேற்றிரவு (11) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :
திருகோணமலை இருப்பிடம் உலகத்திலுள்ள அனைத்து வல்லரசுகளும் பிடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இல்லை சிங்களவர்களுக்கும்,முஸ்லிம்களுக்குமாக மாற்றியமைத்தவர்கள் ரணில் ஆட்சியிலாகும். கடந்த காலத்தில் நாம் எவ்வளவோ சொன்னோம்,அதனை முஸ்லிம் காங்கிரஸ் தட்டிக் கழிந்தார்கள்.
2005 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் ரணிலுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த நிலையிலே தேசிய காங்கிரஸ் மட்டும் தன்னிச்சையான போக்கினை கொண்டது.
இந்நாட்டில் சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அப்போதிருந்தே குரல் கொடுத்து வந்தோம்.
2010 ஆம் ஆண்டு அனைத்து புலிகளையும் அழித்த பெருமை மகிந்த ராசபக்சவையே சாரும்.
இன்றைக்கு இந்த மண்ணை காவு கொள்வதற்கு எவ்வளவோ பாடுபட்டு வருகின்றார்கள்.ரணிலின் அரசாங்கம் இவ்வேளையில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அனைத்து பள்ளிகளையும் உடைத்து வாக்கு கேட்டு வருகின்றார்.
இன்றைக்கு தலைவர் அஸ்ரப் மரணித்து 19 வருடங்களும் ரவூப் ஹக்கிம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றார்.ரணிலுக்கு வக்காலத்து வாங்கி வாக்குகளை ரணிலுக்கு கொட்டி வருகின்றார்.
முஸ்லிம் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி பள்ளிக்கும் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியவர் தான் இந்த ஹக்கிம்.
எவ்வளவு காணிகள் பிரச்சினைகளும் சிக்கல்களுக்கும் இருக்கும் நிலையில் ஹக்கிம் ரணிலுடன் இருந்து கண்டது என்ன பயனை வளங்களையும் இழந்து வருகின்றார்.
இந்த நாட்டினை ஆட்சி செய்ய ஒழுங்கான தலைவரிடம் கொடுக்க வேண்டும் இந்த நாட்டில் முறையான யாப்பு ஏற்படுத்த வேண்டும் மீண்டும் ராசபக்ச குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் அவர்கள் தான் இந்த நாட்டினை பாதுகாக்க கூடிய தலைவர்கள்
இன்று ரவூப் ஹக்கிம் முஸ்லிம் காங்கிரசையும்,பிழைப்பு நடத்தி வாருகின்றார்.
65 லட்சம் வாக்குகளை பெற்று பொது ஜன பெரமுன வெற்றி பெறுவதோடு நிச்சயமாக ஆட்சியமைக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று சின்னாபின்மாகிக் கொண்டிருக்கின்றது துண்டைக் கானோம்,துணியைக் கானோம் என்று றிசாட் மற்றும் ஹக்கிமின் மனைவி மார்கள் மகளீர் மஜ்லிஸ் நடாத்தி வருகின்றார்கள் என்னாத்தை எப்படி நடாத்தினாளும் ரணில் இனிமேல் ஆட்சியமைக்க முடியாது.ரணில் விக்கிரமிங்கவின் காலம் 16 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -