மக்கள் காங்கிரஸினால் மாவடிப்பள்ளியிலுள்ள விவசாயிகளுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு...!




அஹமட் சாஜித் -
மாவடிப்பள்ளியிலுள்ள விவசாயிகளின் விவசாயத்துறையை மேம்படுத்தி ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய, விவசாயிகளுக்கான துவிச்சக்கர வண்டியை இலவசமாக வழங்கி அவர்களை மேம்படுத்தும் முயற்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த எமது கட்சியின் தேசியத் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களிடம் எமது மத்திய குழுவும், பிரதேச சபை உறுப்பினரும் பல்வேறு முயற்சிகளை செய்தனர். அதற்கமைய எமதூரிலுள்ள 30 விவசாயிகளுக்கு தலா 20,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளை வழங்க நிதியை ஒதுக்கியிருந்தார் அல்ஹம்துலில்லாஹ்.
அதன் பிரகாரம் இன்று (29) வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட விவசாயிகளுக்கான துவிச்சக்கர வண்டிகள் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் எம். ஜலீல், மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் போராளிகளும் கலந்து கொண்டனர்.
18 வருடங்களாக ஒரு முஸ்லிம் கட்சியின் தலைமையினாலும், கட்சியினாலும் ஏமாற்றப்பட்ட எமது சமூகமும் ஊரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையின் பிற்பாடு கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமைத்துவத்தினாலும் பல்வேறு அபிவிருத்திகளையும் நன்மைகளையும் நாளுக்க நாள் செய்வதனையிட்டு சந்தோசமடைகின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இதனை அறியாத குறித்த ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சி குறிப்பிட்ட 18 வருடத்தினுல் கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் ஒரு சில அபிவிருத்தித் திட்டங்களை செய்துவிட்டு ஏதோ அவர்களது கட்சித் தலைமையின் அமைச்சின் ஒதுக்கீடுகள் மூலம் செய்தது போல் கொக்கரிப்பதனை நினைக்கும் போது கேவலமாகவும் நகைச்சுவையுமாக உள்ளது. எனவே நாம் அவர்களுக்கு விடும் சவால் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை வீணடிக்காமல் முடிந்தால் கம்பெரலியவைத் தவிர்த்து உங்களது கட்சியின் மூலம் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை சுயமாக செய்து காட்டுமாறு பகிரங்க சவால்விடுகின்றோம்.
எனவே எமது ஊர் மக்களின் தேவைகளை உணர்ந்து பலகோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை வழங்கி எமது ஊரினை கண்ணியப்படுத்தி, அழகுபார்க்கும் எமது கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மாவடிப்பள்ளி மக்கள் சார்பாகவும், பயணாளிகள் சார்பாகவும், மத்திய குழு சார்பாகவும், போராளிகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் ஜஸாக்கல்லாகு கைறா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -