கந்தளாயில் குழப்ப நிலை!!!



எப்.முபாரக்-
கந்தளாயில் தேசிய காங்கிரஸின் தலைவரும்,முன்னால் அமைச்சர் அதாவுல்லாவின் பேச்சினால் ஆத்திரமடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் குழப்ப நிலை ஏற்பட்டது.
திருகோணமலை கந்தளாயில் தேசிய காங்கிரஸின் தலைவரும்,முன்னால் அமைச்சர் அதாவுல்லாவின் பேச்சினால் ஆத்திரமடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் குழப்ப நிலை ஏற்பட்டது.
கந்தளாயில் நேற்றிரவு(11) தேசிய காங்கிரஸினால் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே குழப்ப நிலை ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று சின்னாபின்மாகிக் கொண்டிருக்கின்றது துண்டைக் கானோம்,துணியைக் கானோம் என்று றிசாட் மற்றும் ஹக்கிமின் மனைவி மார்கள் மகளீர் மஜ்லிஸ் நடாத்தி வருகின்றார்கள் என்றவுடன் ஆத்திரமடைந்த ஆதரவாளர்களினால் மேடையை நோக்கி கற்களை வீசியதோடு,தலைக்கவசத்தாலும் வீசி அடித்தார்கள் இதனால் முன்னாள்அமைச்சர் பாதுகாப்பு பிரிவினால் பாதுகாப்பாக மேடையை விட்டு கூட்டிச் சென்றார்கள்.
பின்பு பொலிஸார் குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -