அட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களினால் உருவாக்கப்பட்ட கையெழுத்து சஞ்சிகை வெளியீடும் நிகழ்வு விரிவுரையாளர் ஏ. நழிம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் கலந்து கொண்டு இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களின் கையெழுத்து சஞ்சிகையினை வெளியீடு செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள் மற்றும் சிரேஸ்;ட விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.