புதிய சபாநாயகர் மைத்ரி ?


பாராளமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை வெளியேற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சபாநாயகராக நியமிக்கப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோல் கடந்த ஜனாதிபதி தேர்லில் அடைந்த முன்னேற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப் பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இதன்பேர்து ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -