திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரம்


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் அரச ஊழியர்களின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(4) காலை 7மணிக்கு ஆரம்பமானது.
சுமூகமாகமும் அமைதியான முறையிலும் பொலிஸார் தமது வாக்கு பதிவினை மேற்கொண்டார்கள்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தோசத்துடன் தபால் வாக்கினை அளித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் சகல பொலிஸ் நிலையங்களிலும் இன்றைய தினம் தபால் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர்,வெருகல், புல்மோட்டை,கோமரங்கடவெல போன்ற பகுதிகளிலும் அனைத்து பொலிஸ் அலுவலகங்களிலும் வாக்குத் பதிவு நடைபெற்று வருகின்றன.
அத்தோடு தபால் வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -