தித்திக்கும் தீபாவளிப்பண்டிகையையொட்டி காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகம் அமரர் திருதிருமதி அருளானந்தம் தம்பதியினரின் ஞாபகார்த்தமாக 'கே.பி.எல். ஹொக்கி செவன்ஸ் ' என்ற முக்கோண ஹொக்கி சுற்றுப்போட்டியை முதல் தடவையாக நாளை
தீபாவளியன்று(27) ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளது.
கழகத்தலைவர் தவராசா லவன் தலைமையில் காரைதீவு விபுலாநந்த மத்தியகல்லூரி மைதானத்தில் நாளை பி.ப. 3மணியளவில் நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டிக்கு பிரதமஅதிதியாக இலங்கைவங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் அருளாநந்தம் மகேந்திரராஜா கலந்துசிறப்பிக்கவுள்ளார்.
நட்சத்திர அதிதிகள் கௌரவ அதிதிகள் சிறப்பதிதிகள் விளையாட்டுஅதிதிகள் என பலர் கலந்துகொள்ளும் இச்சுற்றுப்போட்டியில் 3அணிகள் பங்குகொள்கின்றன.
அணிக்கு 7பேர் கொண்ட இம் முக்கோண ஹொக்pக சுற்றுப்போட்டியில் சிவா சலஞ்சர்ஸ் அணி நிமால் நைற்றைடர்ஸ் அணி சகா சுப்பர்கிங்ஸ் அணி ஆகிய 3ஹொக்கிஅணிகள் மோதுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்படவுள்ளது.
விழாவில் 2019இல் கிழக்குமாகாணத்தில் முதலிடம் பெற்று கிழக்குமாகாண சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணிவீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.
இன்று மென்பந்து கிரிக்கட் மற்றும் பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!
இதேவேளை காரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளியை முன்னிட்டு வருடாந்தம் நடாத்திவரும் மெனப்ந்துகிரிக்கட் சுற்றுப்போட்டி மற்றும் பூப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி நாளை (27) ஞாயிறு காரைதீவு காலை விபுலாநந்த மத்திய கல்லூரி மைதானத்துலம் மாலை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.