
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட கிரிக்கெட் அணியினரின் புதிய சீருடை அறிமு நிகழ்வும், சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி ஒன்றும் கலாபீட மைதானத்தில் இடம்பெற்றது.
நாவலடி மர்கஸ் அந்நூர் மற்றும் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சிநேக பூர்வ பதினைந்து ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மர்கஸ் அந்நூர் அணியினர் பதினைந்து ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அணியினர் பதினாங்கு ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப் போட்டியில் வெற்றிபெற்ற நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அணிக்கு நிருவாகத்தினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.