சமாதானமும் சமூகப்பணியும் அனுசரனையில் இயங்கும் கல்முனை பிரதேச மட்ட நல்லிணக்க மன்றங்களின் மாதாந்த ஒன்றுகூடல் கல்முனையில் உள்ள தனியார் வரவேற்பு மண்டபமொன்றில் (30)இன்று நடைபெற்றது .
சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் தேசிய பணிப்பாளர் டி. தயாபரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஒன்று கூடலில் அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனை நல்லிணக்கம் மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல்அஸீஸ் ,மற்றும்கல்முனை வடக்கு நல்லிணக்கம் மன்றத்தின் இணைப்பாளர் வி .தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு இதில் உரையாற்றினர்.
மேலும் இந்த நிகழ்வில் சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி.இராஜேந்திரன் மற்றும் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்காளான எம்.எஸ்.ஜலில் ,எம்.எஸ்.சமீர்,கே.ரோகினி,
நல்லிணக்க மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதன் போது நல்லிணக்கம் தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்றதுடன் இன நல்லுறவை வழுப்படுத்தும் செயற்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட சகவாழ்வு வேலைத்திட்டங்கள் மற்றும் கலந்தோலாசனைகளை மேற்க்கொள்ள இதில் தீர்மானிக்கப்பட்டது.



