தமிழ் பேசும் சமூகத்திற்கு அதிபர் நியமனத்தில் மிகப் பெரிய அநீதி இழைத்து இருக்கிறது-பாதிக்கப்பட்ட அதிபர்கள் குற்றச்சாட்டு


பாறுக் ஷிஹான்-
மிழ் பேசும் சமூகத்திற்கு அண்மையில் வழங்கப்பட்ட புதிய அதிபர் நியமனத்தில் மிகப் பெரிய அநீதி இழைத்து இருக்கிறது என பாதிக்கப்பட்ட அதிபர்கள் சார்பில் நவாஸ் சௌபி குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்தார்.

செவ்வாய்க்கிழமை (1) மாலை 6 மணியளவில் சாய்ந்தமருது பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவித்ததாவது அண்மையில் வெளியாகிய கடந்த அதிபர் தரம் 111 க்கான நியமனத்தில் தமிழ்மொழியில் இருப்பவர்கள் 510 பேருக்கான நேர்முகப் பரீட்சைக்கான தகுதிகாண் கிடைத்திருந்தது.
இதில் சிங்கள மொழியில் உள்ளவர்கள் 3300 பேரும் தமிழ்மொழியில் உள்ளவர்கள் 610 பேருமாக தான் இந்த நேர்முக பரீட்சைக்கு ஒருதலைப்பட்சமாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
நேர்முகப் பரீட்சை தேர்வில் உள்ள அனைவரும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றி பெற்ற இடங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் நிச்சயமாக நியமனத்துக்கு தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் இறுதியில் இந்த 510 தமிழ்மொழி மூலமாக தெரிவானவர்களில் 167 பேர் தான் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தள்ளது. எங்களுக்கு நேர்ந்த மிகப்பெரிய அநீதியாகவே இதை பார்க்கின்றோம்.

தெரிவான 167 பேரில் 34 முஸ்லிம்களும் 133 தமிழர்களும் உள்ளடங்குகிறார்கள் ஏனைய நியமனம் பெற்றவர்களில் 1700 பேர் சிங்கள சகோதர்களாவர். எனவே இது மிகவும் வித்தியாசத்தை சமூக ரீதியாக உள ரீதியாக வேறுபாட்டை காட்டுவதடன் எம்மை ஓரங்கட்டி புறக்கணிப்பு செய்திருப்பதாகவே இந்த நியமனம் சொல்லி காட்டுகின்றது.இது எங்களை பொறுத்தவரையில் இந்நியமனம் தொடர்பாக அந்த பதவி நிலை இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது இலங்கை அதிபர் சேவை நியமனங்கள் பொதுவாக சிங்கள மொழி ரீதியாகவும் தமிழ் மொழி ரீதியாகவும் தனித்தனியே வெற்றிடங்கள் கணிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு தான் இப்பதவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் இந்த வர்த்தமானியில் தமிழ்மொழி மூலமாகவும் சிங்கள மொழி மூலமாகவும் நியமனங்களுக்கான வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்பை மூடுகின்ற வகையில் நடைமுறையை பின்பற்றவில்லை.அதனால் தமிழ் பேசும் மக்களுக்கு சமூகத்திற்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இத ஒரு வகையில் திட்டமிட்ட அரசியல் நியமனமாக பார்க்கின்ற அளவுக்கு இருக்கின்றது. எனவே இந்த நடவடிக்கை தொடர்பாக நாடு பூராவும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து நாங்கள் எங்களுக்கு தமிழ்மொழி மூலமாகத்தான் இந்த நியமனத்தை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் முன்னெடுத்து வருகின்றோம்.அந்த வகையில் மாவட்ட ரீதியாக பல உதவிகளை செய்து மனித உரிமை ஆணைக்குழுவின் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றாகச் சென்று தங்களுடைய முறைப்பாடுகளை தனித்தனியே செய்திருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் தான் அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் இந்த இடத்திலே சாய்ந்தமருது ஒன்று கூடினார்கள்.

இன்று மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொண்டு ஏனைய இடங்களில் பாதிக்கப்பட்டவர்கஅணுகி உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்காக போராடவுள்ளோம் என குறிப்பிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -