தீபம் ஒளிரும்: அநீதி ஒழியும்: மகிழ்ச்சி பொங்கும்: அடுத்த வருடமும் இந்து மத விவகார அமைச்சராக வந்து வாழ்த்துவேன் -மனோ கணேசன்
தீபம் ஒளிர, அநீதி ஒழிய, மகிழ்ச்சி பொங்க தீபாவளியை கொண்டாடுவோம் எனவும், இன்னமும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புதிய ஆண்டு கொண்டு வரவிருக்கும் புதிய பல முற்போக்கு திருப்பங்களை, இன்றைய தீபத்திருநாள் பிரதிபலிக்க வேண்டும் எனவும், தீபாவளி தீபத்திருநாள் எங்கள் மனங்களிலும், மனைகளிலும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரவேண்டும் எனவும், இந்நாட்டு தமிழ் இந்து உறவுகளுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கும் அதே வேளையில், அடுத்து வரும் புதிய வருடத்திலும், இதே இந்து மத விவாகாரத்துக்கு பொறுப்பான அமைச்சராக இந்நாட்டு தமிழ் இந்து உறவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் முற்போக்கு சூழல் உருவாகிட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...