முதியோர் தினம் மற்றும் சிறுவர் தின விழா

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவூ தோட்டத்தில் இயங்கும் அண்ணா சிரேஷ்ட முதியோர் கழகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினம் மற்றும் சிறுவர் தின விழா 07.10.2019 அதன் தலைவர் அந்தோனி சு+சை தலைமையில் மிகவூம் சிறப்பாக நடைபெற்றது.
தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முதியோர்களுக்கு ஆசிவேண்டி விஷேட பூஜைகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து. முதியோர்களை நினைவூ கூரும் வகையில் மரக்கன்றுகள் பிரதம அதிதிகளால் நாட்டப்பட்டது.
அரசாங்கத்தினால் 160 முதியோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இக்கழகத்தினை ஆரம்பித்து இரண்டு வருடகாலத்தில் முன்பள்ளி மாணவர்களை ஊக்குவித்தல் சிரமதான பணி அரசபாடசாலைகளில் கல்லி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட சமூக பணிகளை மாதாந்தம் இவர்களால் சேர்க்கப்பட்ட பணத்தில் இவ்வாறான சமூகசேவைகளை மேற்கொண்டு வரும் 160 முதியோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்நிகழ்வில் தேச அபிமானி தேசபந்து அகில இலங்கை சமாதான நீதவான் பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனர் எஸ் கே. சந்திரசேகரன் பெரன்டினா நிறுவன இணைப்பதிகாரி என்.கோகுல் கிராம அதிகாரி திருமதி வீனாதேவி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ் சுபாஷினி நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எஸ் யோகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பிரிடோ நிறுவனம் மற்றும் பெரன்டினா சமூகசேவை நிறுவனங்கள் அனுசரனை வழங்கியமை குறிப்பிடதக்கது
இதேவேளை விழாவில் கலந்துகொண்ட அனைத்து அதிகளுக்கும் முதியோர்களால் மகுடம் ச+ட்டி கௌரவித்தனர்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -