மினுவாங்கொடையில் எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள்

டந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, மே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் சேதமாக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றீடாக நிர்மாணிக்கப்பட்ட 28 கடைகள் நேற்று மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்களினால், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்குக் கையளிக்கப்பட்டது.
மினுவாங்கொடை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கடைத் தொகுதியின் நிர்மாணப்பணிக்கான நிதி உதவியினை, உலக மேமன் சங்கமும், வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கிருலப்பனை பள்ளிவாசல்கள் ஒன்றியமும் வழங்கியிருந்தன.

நகர சபையின் திட்டமிடலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இக்கடைத் தொகுதிக்கு 20 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொடை விகாராதிபதி உட்பட உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -