வன ரோபா" தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான வைபவம் வன இலாகாவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பதுளையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெரிய புல்லுமலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் மாவட்ட வன அதிகாரி பிரகீத் பெரேரா தலைiயில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உதவி வன அதிகாரி கலாநிதி MA. ஜாயா, மற்றும் விவசாய பணிப்பாளர் YB. இக்பால் புல்லுமலை வட்டார வன அதிகாரி N. செல்வநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
சர்வமத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வின்போது தேசிய மரமான நாவல் மரக்கன்று மற்றும் பழமரக்கன்றுகளும் சம்பிரதாயபூர்வமாக நடப்பட்டன.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவிகளின் நடனங்கள் மற்றும் பெரிய புல்லுமலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களது நாடகமும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
இம்மாணவர்களுக்கு பெறுமதிவாய்ந்த நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
புல்லுமலை வட்டார வன காரியாலயம் இவ்வைபவத்தினை ஒழுங்கமைத்திருந்தது.