தமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது


அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர்.கிசான் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லையக வாழும் தமிழ் பேசும் மக்கள் இன்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். அரசியல் ரீதியாக பலருக்கு வாக்களித்து, வந்த போதிலும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் கூட தீர வில்லை. இன்று, எமது தலைவர்கள் சொல்கிறார்கள். எமது மக்கள் நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும் என்று. ஆனால் அவர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம்,சென்று அமைச்சர் பதவி ,ஜனாதிபதி பதவி,பிரதமர் என்று எல்லாவற்றையும் பெற்றுவிட்டு எமது மக்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யமல் உள்ளன.சுமார் இருநூறு வருடங்களாக எமது மக்கள் இந்த நாட்டுக்கும் தலைவர்களுக்கும் நன்றியுடைவர்காளக இருந்த போதிலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்துள்ளாரகள்.ஆகவே எமது மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே வேளை நன்றி கெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்க கூடாது. என அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்த்தர்களை தெளிவு படுத்து கூட்டம் ஒன்று இன்று (10) காலை டிக்கோயா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த மாதம் பொகவந்தலா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (16) எபோஸ்லி புளோரன்ஸ் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு ஆளாகி ஒருவர் மரணமடைந்தார்.இதற்கும் முன்னும் எத்தனையோ பேர் இறந்துள்ளார்கள்.இன்று வைத்தியதுறை பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவரை கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு மலையக சுகாதார துறை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.இன்;;;;று நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் ,இருதயம்,போன்றனவற்றை மாற்றி கூட நோயாளியை வாழ வைக்கிறார்கள்.ஆனால் தொழிலாளி மாத்திரம் குளவி கொட்டுக்கு ஆளாகி கூட தனது உயிரிழக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் தோட்ட சுகாதார துறை வீழ்ச்சி கண்டமையே.தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளை மூடிவிட்டு அரசாங்கம் வைத்தியசாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததனால் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது.ஆகவே தோட்டங்களில் தோட்ட வைத்திய துறை மேம்படுத்த நடவடிக்;கை எடுக்கப்பட வேண்டும். தோட்ட வைத்தியர்கள் இருந்தால் ஏதோ வகையில் முதலுதவி அளித்து நோயாளர்களை காப்பாற்ற முடியும்.ஏதாவது நடந்த பின் அதை செய்கிறோம் .இதை செய்கிறோம்.எமது தலைவர்கள் தெரிவித்து வந்த போதிலும் இது வரை உருப்படியான ஒன்றையும் செய்யவில்லை.
மலையகத்தில் பலர் வேலை இன்றி இருக்கிறார்கள். பலர் சிறுநீரக நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். குடிப்பதற் சுத்தமான தண்ணீர் கிடையாது.தோட்டங்கள் காடாகின்றன,குளவிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் போசாக்கின்மையினால் 37 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவற்றைக் கட்டுப்டுத்துவதற்கோ,அல்லது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ முறையான திட்டம் எதுமே கிடையாது. ஆகவே வாக்களித்தவர்களுக்கு தலைவர்கள் நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும.; என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -