S.சஜீத்-
மட்டக்களப்பு பல் சமய தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்களுக்கான முரண்பாட்டு நிலை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அபிநாம் ஸ்ரீலங்கா மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு புதன்கிழமை நேற்று 16 காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை மட்டக்களப்பு ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் வனபிதா ரோஹான் அடிகளார் அவர்களின் தலைமையில் அனைத்து பல்சமய தலைவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.
இதன்போது அபிநாம் பற்றிய அறிமுக உரையினை சிவஸ்ரீ வி.கே. சிவபாலன் குருக்கள் அவர்கள் நிகழ்த்தியதுடன் "முரண்பாடுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் அவற்றின் விளைவுகளும்" என்னும் தலைப்பில் சட்டத்தரணி. யோகேஸ்வரன் அவர்கள் மற்றும் அஷ்ஷெய்க். எம்.பி.எம் பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு குறித்த செயலமர்வை முன்னேடுத்துச்சென்றதோடு முரண்பாட்டு நிலை தொடர்பான குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் குழு ஆய்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.