கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரசாக் அவர்களின்
தலைமையில் இன்று (07/10/2019)நடைபெற்றது.
மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள்
08 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வின் போது இவ் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும், பாராட்டுக்களையும் அதிபர் அவர்கள் தெரிவித்தார்.