மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மதுவற்ற மலையகம் நோக்கிய அருள் யாத்திரை 12 வருடமாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனர் எஸ் கே சந்திரசேகரன் தெரிவித்தார் .
இவர் மேலும் தெரிவித்ததாவது.
மலையக மக்களின் வாழ்க்கை தரம் மாணவர்களின் கல்வி இளைஞர்களின் எதிர்காலம் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காகவும் பிரிடோ நிறுவனம் தொடர்ந்து அர்ப்பணித்து செயல்படுவதால் இன்று மலையக மக்கள் மத்தியில் பாரியமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.கடந்த 11 வருடங்களுக்கு முன்பு மலையகத்தில் மது அரக்கனின் கொடுரத்தால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் மலையக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையென பலராலும் கூறப்பட்டது.
மலையகத்திருந்து மது அரக்கனை விரட்டி அடிப்பதற்காவும் சமூகத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் கடந்த 11 வருடகாலமாக நிறுவனம் மதுவற்ற மலையகம் நோக்கிய அருள் யாத்திரை என்ற பரிந்துரை முன்னெடுத்ததன் காரனமாக இன்று மலையகத்தில் பாரிய அளவிலான மது பாவனை குறைவடைந்துள்ளமை எமது மக்களுக்கு சமூகத்திற்கும் கிடைத்த வெற்றி
என்பதை அனைவரும் புரிந்து கொண்ட உண்மை.
ஆரம்பத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு மாத்திரம் முன் பள்ளி ஆசிரியர்கள் பெண்கள் கழக உறுப்பினர்கள் இளைஞர்கள் சிறுவர்கள்
சமூக அபிவிருத்தி குழு மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரின் உண்ணதமான செயல் பாட்டின் காரணமாக வீடுகளுக்கு இவர்கள் சென்று வாழ்த்து அட்டைகள் வழங்கினார்கள் .
இன்று 40 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்குவதற்கு பிரிடோ நிறுவனம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது .
இதற்கு காரணம் மலையக மக்கள் வழங்கும் பங்களிப்பே காரணம்.
கடந்த காலங்களில் பிரிடோ நிறுவனம் முன்னெடுத்த பரிந்துரை தற்போது மக்கள் முன்வந்து செய்யும்அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்பரிந்துரையின் போது மக்கள் வழங்கி நிதி பங்களிப்பு காரணமாக மலையக பகுதியில் குடும்ப கஸ்டத்தினால் உயர் கல்வியை தொடர முடியாமல் இருந்த 469 மாணவர்களுக்கு உதவிகள் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத்தில் மது அருந்தும் கலாசாரம் நாளுக்குநாள்
குறைந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வருடம்12 வது தடவையாகும் பரிந்துரை திட்டம் முன்னெடுக்கபடுகின்றது.
இம்முறை புதிய பிரதேச செயலகம் உருவாக்க 20 ஆயிரம் கையொப்பம் எடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை மக்களுக்கு வழங்கப்படும் வாழ்த்து அட்டையில் மக்கள் உரிமையுடன் குரல் கொடுக்கும் வகையில்
பதிய பிரதேச செயலகங்கள் விரைவில் அமைக்க அழுத்தம் கொடுப்போம்.
காணி தேசிய சுகாதாரம் பெரும் தெருக்கள் உரிமைகளை அனுபவிக்கும் சூழலை உருவாக்குவோம்.
சிறுவர் பெண்கள் உரிமைகளை மேம்படுத்துவோம்.
தமது முன்னேற்றத்துக்கான தடைகளை தகர்ந்து வருவதால் புதிய நம்பிக்கையோடு தீபத்திருநாளை கொண்டாடுவோம்.
பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளை பயன்படுத்துங்கள்
என்ற மக்களுக்கு பயன் தர கூடிய வாசகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது .
எனவே உங்கள் வீடுகளுக்கு வரும் இந்த பிரச்சார குழுவை வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் இவர் தெரிவித்தார்