ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் 59 இலட்சம் ரூபாய் நிதி .

ரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் கல்குடா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலைக்கு) நுழைவாயில் அமைப்பதற்காக 59 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு கலாச்சார பிரதிபலிப்புக்களுடன் கூடிய நுழைவாயில் அமைப்பதற்காக 59இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
கல்குடா பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பில் வட்டார பிரதிநிதியான அன்வர் (விஜிதா )மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்த்தர்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் பாடசாலையின் அதிபர் ஹலீம் இஷ்ஹாக் இடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , கட்சி முக்கியஸ்த்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தியதற்கான காரணகர்த்தாவாக அமைந்தவர் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா என்பதுடன் பல்வேறு அபிவிருத்தி பணிகள் அங்கு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -