கண்ணில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள கண்களை பரிசோதிக்கும் முகாம் இன்று திங்கட்கிழமை (28) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த இப் பரிசோதனை முகாமில் கல்குடா தொகுதியிலிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 88 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை எதிர்வரும் 4ம் திகதி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதென்று ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி தெரிவித்தனர்.