வாழைச்சேனை துறைமுகத்தை நான்காயிரம் மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யவுள்ளோம் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
தற்போது இருநூற்றி நாற்பது படகுகள் நிற்பாட்டப்படுகின்ற வாழைச்சேனை துறைமுகத்தில் ஒரே தடவையில் எழுநூறு படகுகள் நிற்பாட்டுகின்ற இடமாக அதனை புனர்நிர்மாணம் செய்து இலங்கையிலே மிகப் பிரதானமான மீன்பிடித் துறைமுகமாக வாழைச்சேனை துறைமுகத்தை மாற்றியமைக்கவுள்ளோம்.
வாழைச்சேனை துறைமுகத்தை புதிய நவீயின தொழிநுட்பத்தின்கீழ் அமைச்சர் பீ.ஹரீசன் வழிகாட்டலில் புனரமைக்கவுள்ளோம்.
மீனவர்களின் பிரதானமான வாழ்வாதாரமாகவுள்ள இவ் வேலைத்திட்டத்தை வழங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விசேடமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.