புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வெற்றிக்கான முன்னெடுப்பாக கலந்துரையாடல் ஒன்று கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இன்று (29) மாலை இடம் பெற்றது.
புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் விசேட வழிகாட்டுதலின் கீழ் சஜத் பிரேமதாசவின் தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மூதூர் தேர்தல் தொகுதியின் அமைவிடங்கள் வாக்காளர் விபரங்கள் என பல்வேறு விளக்கங்களை பிரதியமைச்சர் இதன் போது முன்வைத்தார்.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ,ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் பிரமுகர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.