இம்முறை வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அட்டாளைச்சேனை அல்/முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கற்ற 17 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளனர்.
அத்துடன் அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள மாணவர்கள் பெற்றபுள்ளிகளில் அதிகூடிய புள்ளியான 188 புள்ளிகளைப்பெற்று "சமீல் பாத்திமா இனாயா "என்பவர் முதலாவது இடத்தைப் பெற்று புகழ் சேர்த்தவர் இப்பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவிகளின் வெற்றிக்கு பின்புலமாய் விளங்கிய அதிபர் M,H.M.றஸ்மி அவர்களுக்கும்,பிரதி அதிபர்களான A.K.அனீஸ்,M.A.சுஹைறா ,உதவி அதிபர்கள்,ஆரம்பப்பிரிவு வலயத்தலைவர் A.C.M.ஹாரித் தரம் 1முதல் தரம் 5 ரை கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரவு பகலாக மாணவர்களை வழிப்படுத்திய தரம் 5 ஆசிரியர்களான M.Y.சம்ஹுடீன்,A.R.M.றிம்ஸான் ஆகிய இருவருக்கும் மற்றும் பெற்றோர்கள் மாணவிகள்,பாடசாலை சமுகத்தினர் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்