கல்முனை வலயத்தில் 425மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தெரிவித்தார்.
வலயத்திலுள்ள 5 கோட்டங்களின் பெறுபேறுகள் வருமாறு : கல்முனை (முஸ்லிம்) - 110 கல்முனை (தமிழ்) - 131 சாய்ந்தமருது - 66 நிந்தவூர் -60 காரைதீவு -58
கல்முனையில் தனியொரு பாடசாலை அதிகூடிய 88 மாணவர்களுடனான சித்தியைப்பெற்றிருப்பது கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியிலாகும்.
அதிகூடிய 191 புள்ளிகளை மருதமுனை அல்மனார் மகாவித்தியாலய மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை தமிழ் பிரிவில் சித்தி பெற்ற 131 மாணவர்களுள் 88பேர் கல்முனை பற்றிமாவைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்தவருடம் கல்முனை வலயத்தில் 317மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றிருந்தனர்.
வலயத்திலுள்ள 5 கோட்டங்களின் பெறுபேறுகள் வருமாறு : கல்முனை (முஸ்லிம்) - 120 கல்முனை (தமிழ்) - 85 சாய்ந்தமருது - 44 நிந்தவூர் -42 காரைதீவு -26 ..கல்முனையில் தனியொரு பாடசாலை அதிகூடிய 63 மாணவர்களுடனான சித்தியைப்பெற்றிருந்தது கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியிலாகும்.
கல்முனை தமிழ் பிரிவில் சித்தி பெற்ற 85 மாணவர்களுள் 63பேர் கல்முனை பற்றிமாவைச் சேர்ந்தவர்களாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.