150 அடி பள்ளத்தில் பாய்ந்த அம்பியூலன்ஸ் வண்டி - இருவர் பலத்த காயம்

க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் 27.10.2019 அன்று அதிகாலை 1.30 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் டயகம பிரதேச வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற அரச அம்பியூலன்ஸ் வண்டி, நோயாளியை வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீ்ண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக, பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தின் போது, அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வருகின்றனர்.
நானுஓயா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாரந்தூக்கி இயந்திர உதவியின் மூலம், விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை இழுத்து பாதைக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -