ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச் .எம். அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு நாளை




எம்.என்.எம்.அப்ராஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைக் காரியாலயத்தில் நாளை (16) திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில்  உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எஸ்.ரி.எல். மஜீட், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், , கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயமாக கடந்த 30 வருடங்களாக தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து இயங்கிவருகின்றமைகுறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -