நல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை- ரன்முத்துகல சங்க ரத்ன தேரர்

பாறுக் ஷிஹான்-

ல்லாட்சியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

இப்பொழுது நாம் முக்கியமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். விசேடமாக எமது நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்

வடக்கு கிழக்கில் வாழும் உறவுகளுக்கு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் நாட்டைப் பற்றிய, தேசிய பாதுகாப்பை பற்றி , மக்கள் நலன் குறித்து சிந்திக்கின்ற தலைவரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்கள் இன்றுவரை வேதனையுடனும் கவலையுடனும் வாழ்கின்றனர். சிறுபான்மை மக்கள் பற்றி சிந்திக்கின்ற தலைவரே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்களது வாக்குகளே மிகப் பெறுமதியானது அந்த வாக்குகளை நாம் அவதானத்துடனும் நிதானத்துடனும் இதைப்பற்றி சிந்திக்க தலைவருக்கு அளிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிவந்த அசாதாரண சூழ்நிலை பற்றி மக்கள் அறிந்து இருப்பார் இவற்றில் பல மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவ்வாறான சூழ்நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாவண்ணம் பாதுகாக்க தலைவரே நாம் எதிர்பார்க்கின்றோம்.

நல்லாட்சியில் அபிவிருத்திகள் இடம்பெற்றதாக கூறிக்கொள்கின்றனர் ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் எந்த ஒரு அபிவிருத்தியையும் காணவில்லை என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -