ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மத்திய மாகாண கல்வி சேவையாளர்களின் வரையறுக்கப்பட்ட சனச சங்கத்தின் இந்த மூன்று வருடத்திற்கு தெரிவானவர்களின் முதலாவது மகா சபை கூட்டம் நேற்று 01 ம் திகதி கண்டி போகம்பர கூட்டுறவு திணைக்கள கட்டட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் வை.எம்.எச்.பண்டார அவர்களின் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் முதலில் இறந்த சனச கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் நினைவு கூறப்பட்டது அதனை தொடர்ந்து அழைப்பு கடிதங்கள் மகா சபை அங்கத்தவர்களால் அங்கிகரிக்கப்பட்டதுடன் கடந்த வருட கணகாய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டன.
தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சி பாதையினை சங்கத்தின் தலைவர் எடுத்துரைத்ததுடன் எதிர்காலத்தில் சங்க வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வுக்கு மத்திய கூட்டுறவு ஆணைக்குழுவின் அதிகாரிகள்,சங்கத்தின் செயலாளர் ஏ யு பண்டார உட்பட மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மகா சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


